முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Raghava Lawrence: மிரட்டலான லுக்... திகில் தெறிக்கும் ராகவா லாரன்ஸின் ‘துர்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Raghava Lawrence: மிரட்டலான லுக்... திகில் தெறிக்கும் ராகவா லாரன்ஸின் ‘துர்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

துர்கா ஃபர்ஸ்ட் லுக்

துர்கா ஃபர்ஸ்ட் லுக்

துர்கா படத்தில் ராகவா லாரன்ஸ் தவிர மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

திகில்-த்ரில்லர் வகைக்கு ராகவா லாரன்ஸ் புதியவர் அல்ல. அவரது முந்தைய திரைப்படங்களான 'முனி' (2007), 'முனி 2: காஞ்சனா', 'காஞ்சனா 2' மற்றும் 'காஞ்சனா 3' ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானவை. இதில் 'முனி 2: காஞ்சனா' திரைப்படம் 'லட்சுமி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமானார் லாரன்ஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் அவர் தற்போது தனது புதிய படமான 'துர்கா' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் மற்றொரு திகில் படத்திற்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது. அந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் நீண்ட தாடி மற்றும் மீசையுடன் ஒரு பழைய தோற்றத்தில் காணப்படுகிறார். ரசிகர்களை அதை பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.

இதனை ராகவா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படம் தொடர்பான மற்ற தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இது 'முனி' தொடரின் ஒரு பகுதியாக இருக்குமோ என யூகங்கள் கிளம்பினாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தவிர ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' படத்தில் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Raghava lawrence