நாங்களும் தமிழ் பிள்ளைகள்தான்! மீண்டும் சீமானைத் தாக்கிப் பேசிய ராகவா லாரன்ஸ்

நாங்களும் தமிழ் பிள்ளைகள்தான்! மீண்டும் சீமானைத் தாக்கிப் பேசிய ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
  • News18
  • Last Updated: December 13, 2019, 6:11 PM IST
  • Share this:
தாங்கள்தான் தமிழ்தாயின் மூத்தப் பிள்ளை என்று சொல்கிறார்கள். நாங்கள் என்ன அமெரிக்காகாரர்களுக்குப் பிறந்தவர்களா? என்று நடிகர் ராகவா லாரன்ஸ் காட்டமாக பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை காமராஜ் அரங்கில் அவருக்கு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகை மீனா, கே.எஸ் ரவிகுமார், ராகவா லாரன்ஸ், எழுத்தாளர் கலைஞானம், பி.வாசு, எஸ் பி முத்துராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், ‘கமலை தான் தவறுதலாக பேசிய விட்டதாகவும் அதற்கு மன்னிப்பும் கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், ‘

புனிததிற்கு இன்னொரு பெயர் ரஜினிகாந்த்.


என் தலைவனுக்கு 70 வயது என்றால் என்னால் நம்பமுடியவில்லை. அவருக்கு வயது 25 வயது தான்.
வெறித்தனம் என்பது ரஜினிகாந்த்துக்கு மட்டும் தான் அமையும். வேறு யாருக்கும் அமையாது.
கமல்ஹாசனைப் பற்றி ஒரு விஷயத்தை புரிய வைக்க விரும்பிகிறேன். அறியாத வயதில் கமல் சார் போஸ்டரில் சாணியை அடித்து இருக்கிறேன். அது அறியாத வயது.கமல், ரஜினி ரசிகர்கள் எப்பொழுதும் ஒன்றாக இருக்க வேண்டும்.

தர்மம் இருக்கும்போது அதர்மம் தலை தூக்கும். ஆனால் அது குறிப்பிட்ட காலம் வரையில் தான்.
நல்ல அரசியல் கெட்ட அரசியல் என்று இருக்கிறது. எல்லோரையும் வரவேற்பது தான் நல்ல அரசியல்.
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். நான் மட்டும் வர வேண்டும் என்பது அரசியல் கிடையாது.
நான் தாம் தமிழ் தாயின் மூத்த பிள்ளை என்று சொல்கிறார்கள். நாங்கள் என்ன அமெரிக்ககாரர்களுக்கு பிறந்தவங்களா..? நாங்களும் தமிழ் தாயிக்கு பிறந்தவங்கள் தான்.

விமர்சிப்பவர்களை பெயர் சொன்னால் தான் ஆம்புளைனு சொல்லுவாங்க. பெயர் சொல்லி தான் நான் ஆம்புளைனு நான் நிருபிக்க வேண்டுமா..? உங்களை விட நான் நன்றாக பேசுவேன். நான் இராயபுரத்தில் பிறந்தவன் என்ன வேண்டுமானும் பேச முடியும். ஆனால் நான் ரஜினி ரசிகன் அப்படி பேச மாட்டேன். நீ ஓட்டுக்காக பண்றவன். ரஜினி ரசிகன் நான் நாட்டுக்காக பண்றவன்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்