இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்...! மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் ராகவா லாரன்ஸ்

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்...! மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
  • Share this:
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் ஆகிய  மூன்று மதங்களுக்கும் ராகவா லாரன்ஸ் ஒரே ஆலயம் துவங்குகிறார்

திரைத்துறை பிரபலமாக வலம் வரும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, பண வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி வசதிகள் செய்தி தருவது உள்ளிட்ட சமூகநலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்நிலையில் வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியுள்ளது லாரன்ஸ் அறக்கட்டளை. இதற்காக லக்‌ஷ்மி பாம் படப்பிடிப்பின் போது நடிகர் அக்‌ஷய்குமாரிடம் தனது முயற்சியை தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.


இத்தகவலை நேற்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த லாரன்ஸ் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் ஆகிய 3 மதங்களுக்கும் ஆலயம் ஒன்றைக் கட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, ”மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சி.நெருப்பிற்கும் பசிக்கும் சாதி மதம் தெரியாது அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது” என்றார்.

மேலும் விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: குளியலறை வீடியோவை பதிவிட்ட மீராமிதுன் - சவுத் இந்தியாவின் பூனம் என நெட்டிசன்கள் புகழாரம்!
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading