• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாயகனாகும் லாரன்ஸ் தம்பி!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாயகனாகும் லாரன்ஸ் தம்பி!

கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிகுமாரின் கடைசி வெற்றி 2008-ல் வெளியான தசாவதாரம். அதன் பிறகு இயக்கிய ஆதவன், ஜக்குபாய், மன்மதன் அம்பு, லிங்கா படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

  • Share this:
    நடிகர் ராகவா லாரன்சின் தம்பி நாயகனாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

    ஒருகாலத்தில் ரஜினி, கமல் படங்களை மாறி மாறி இயக்கி வந்த கே.எஸ்.ரவிக்குமார் கடந்த பல வருடங்களாக தமிழில் படம் இயக்கவில்லை. தமிழில் அவரது கடைசி வெற்றி 2008-ல் வெளியான தசாவதாரம். அதன் பிறகு இயக்கிய ஆதவன், ஜக்குபாய், மன்மதன் அம்பு, லிங்கா படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

    2014-ல் லிங்கா வெளியான பிறகு, கடந்த 7 வருடங்களாக தமிழில் அவர் படங்கள் இயக்கவில்லை. கன்னடத்தில் சுதீப்பை வைத்து அவர் இயக்கிய படம் முடிஞ்சா இவன புடி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

    தமிழில் படம் இயக்காத போது கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடைக்கலமாக இருந்தது தெலுங்கு சினிமா. குறிப்பாகச் சொன்னால் நடிகர் பாலகிருஷ்ணா. அவரை வைத்து 2018-ல் ஜெய் சிம்ஹா படத்தையும், 2019-ல் ரூலர் படத்தையும் இயக்கினார். முதல் படம் வெற்றி, இரண்டாவது தோல்வி.

    மலையாளத்தில் வெளியான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தயாரித்து, நடித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். அவரிடம் நீண்டகாலமாக உதவி இயக்குனர்களாக இருந்த இருவர் படத்தை இயக்கியுள்ளனர். 7 வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவர் படம் இயக்குகிறார். இந்தமுறை லாரன்சின் தம்பி எல்வினை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

    எல்வின் காஞ்சனா 2 படத்தில் தலைகாட்டியிருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவது ஹீரோவாக அவரது முதல் படம். ட்ரைடன்ட் ஆர்ட்ஸும், ஏஆர் என்டர்டெயின்மெண்டும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. லாரன்ஸ் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

    இந்த வருடம் ஜுன் 20-ஆம் தேதி ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி எல்வின், ராஜ் கிரண் நடிப்பில் ஒரு படத்தை அறிவித்தது. முக்கியமான நாயகன் ஒருவரும் இந்தப் படத்தில் நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அறிவிப்போடு அந்தப் படம் கைவிடப்பட்டது. அந்த புராஜெக்ட் தான் இப்போது வேறு கைகளுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள்.

    Raghava Lawrence brother Elvin is the hero in KS Ravikumar next directorial, ks ravikumar, ks ravikumar next movie, ks ravikumar movie, ks ravikumar elvin movie, கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.ரவிக்குமார் படம், கே.எஸ்.ரவிக்குமார் ராகவா லாரன்ஸ், கே.எஸ்.ரவிக்குமார் எல்வின்
    லாரன்ஸ் - எல்வின்


    விரைவில் படத்தின் பெயர் மற்றும் விவரங்களை அறிவிக்க உள்ளனர். .



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: