ராகவா லாரன்ஸ், சரத்குமார் இரண்டாவது முறையாக இணையும் ருத்ரன் படத்தின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் காஞ்சனா ஹாரர் சீரிஸ் தவிர்த்து மற்ற படங்கள் அத்தனை வரவேற்பை பெறுவதில்லை. மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற படங்கள் தோல்வியடைந்தன. இந்நிலையில் ருத்ரன், துர்கா, அதிகாரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரன் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் மறுபடி உறுதி செய்துள்ளார்.
Also Read : Omicron Virus | டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பொல்லாதவன் உள்பட பல படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் படத்தை தயாரிக்கிறார். அத்துடன் ருத்ரனை இயக்கவும் செய்கிறார். இயக்குனராக ருத்ரன் அவரது முதல் படம். இதில் ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். முனி 2 - காஞ்சனா படத்தில் லாரன்சுடன் சரத்குமார் முதன்முறையாக இணைந்து நடித்தார். பிளாஷ்பேக்கில் வரும் சரத்குமாரின் திருநங்கை வேடம் படத்துக்கு பலமாக அமைந்து படம் சூப்பர் ஹிட்டானது.
லாரன்ஸ், சரத்குமார் மறுபடியும் ருத்ரனில் இணைந்துள்ளனர். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் ருத்ரன் 2022 ஏப்ரலில் வெளியாகும் என முன்பே கூறப்பட்ட நிலையில் ஏப்ரல் 14 படம் திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Also Read : இளநரையுடன் எளிமையாக திருமணம் செய்த நடிகரின் மகள்... குவியும் பாராட்டு
காஞ்சனா சீரிஸ் தவிர்த்து மற்ற படங்களில் வெற்றி எட்டாக்கனியாகிப் போன லாரன்சுக்கு ருத்ரன் முக்கியமான படமாக கருதப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.