பொழுதுபோக்கு

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali
Home » News » Entertainment » CINEMA RAGHAVA LAWRENCE AKSHAY KUMAR LAXMMI BOMB RELEASE DIWALI IN OTT MSB

தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ராகவா லாரன்ஸ் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள லட்சுமி பாம் திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ராகவா லாரன்ஸ் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராகவா லாரன்ஸ்
  • Share this:
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும், ஹீரோயினாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் தற்போது ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படத்தை ராகவா லாரன்ஸே இயக்கியுள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே ஊரடங்கு அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியிடப்படவில்லை.

ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளதால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 9-ம் தேதி அன்று ‘லட்சுமி பாம்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து விரைவில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading