ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Radikaa Sarathkumar: ’இதான் காலை மகிழ்ச்சி’ லைக்ஸை குவிக்கும் ராதிகா படம்!

Radikaa Sarathkumar: ’இதான் காலை மகிழ்ச்சி’ லைக்ஸை குவிக்கும் ராதிகா படம்!

ராதிகா

ராதிகா

சினிமாவிலும், சின்னத்திரையில் முன்னணி இடத்தைப் பிடிப்பது மட்டுமல்ல, அதை தொடர்ந்து தக்க வைக்கவும் முடியும் என்பதில் நடிகை ராதிகா மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

காஃபி கப்போடு நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் பாஞ்சாலி எனும் கதாபாத்திரத்தில், அப்பாவி கிராமத்து பெண்ணாக அறிமுகமான ராதிகா, 80 மற்றும் 90-களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்தார். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம்பேர் விருது மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றார்.

சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, தொலைக்காட்சியிலும் எண்ட்ரியானார். சினிமாவிலும், சின்னத்திரையில் முன்னணி இடத்தைப் பிடிப்பது மட்டுமல்ல, அதை தொடர்ந்து தக்க வைக்கவும் முடியும் என்பதில் நடிகை ராதிகா மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார்.

சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என பல சீரியல்களை தயாரித்து அதில் தானே நடிக்கவும் செய்தார். இதற்கிடையே இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்த அவர், படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார், அவ்வப்போது தனது படங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கையில் காஃபி கப்புடன் கண்களை மூடிக்கொண்டு ரசித்து ருசித்து காஃபியை குடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு ’காலைநேரத்தின் மகிழ்ச்சி’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Radhika sarathkumar