நடிகை ராதிகா சரத்குமார் கொரோனாவுக்கான தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டார்.
இந்தியா கோவிட் -19 தடுப்பூசியை பெற்று வரும் நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசையை போட்டுக் கொண்டார். தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருந்தார். படத்தில், அவர் மாஸ்க் அணிந்திருப்பதைக் காண முடிந்தது. அப்போது செவிலியர் ஒருவர் ராதிகாவுக்கு தடுப்பூசி போட்டார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒரு படத்தைப் பகிர்ந்த ராதிகா சரத்குமார், ”தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தயவுசெய்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி போடுங்கள். அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
Protect yourself and loved ones, the vaccination drive has started. Please go and get yours, the second wave has started and we need to act responsibly 🙏🙏
தடுப்பூசி போடுவதற்கு முன்பு, "உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள், தடுப்பூசி இயக்கம் தொடங்கிவிட்டது. தயவுசெய்து போட்டுக் கொள்ளுங்கள். இரண்டாவது அலை தொடங்கிவிட்டது, நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், ராதிகா கடைசியாக மணிரத்னம் தயாரித்த 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தார். அதோடு கெளதம் மேனன் இயக்கியுள்ள விக்ரமின் 'துருவ நட்சத்திரம்', ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஜெயில்' மற்றும் அதர்வா - பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'குருதி ஆட்டம்' ஆகியப் படங்களிலும் ராதிகா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.