• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Radikaa Sarathkumar: வயது வெறும் நம்பர் தான்... ஃபிட்னெஸில் கலக்கும் ராதிகா!

Radikaa Sarathkumar: வயது வெறும் நம்பர் தான்... ஃபிட்னெஸில் கலக்கும் ராதிகா!

ராதிகா

ராதிகா

சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என பல சீரியல்களை தயாரித்து அதில் தானே நடிக்கவும் செய்தார்

  • Share this:
    இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் நடிகை ராதிகா சரத்குமாரின் உடற்பயிற்சி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் பாஞ்சாலி எனும் கதாபாத்திரத்தில், அப்பாவி கிராமத்து பெண்ணாக அறிமுகமான ராதிகா, 80 மற்றும் 90-களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்தார். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம்பேர் விருது மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றார்.

    சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, தொலைக்காட்சியிலும் எண்ட்ரியானார். சினிமாவிலும், சின்னத்திரையில் முன்னணி இடத்தைப் பிடிப்பது மட்டுமல்ல, அதை தொடர்ந்து தக்க வைக்கவும் முடியும் என்பதில் நடிகை ராதிகா மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார்.

    சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என பல சீரியல்களை தயாரித்து அதில் தானே நடிக்கவும் செய்தார். இதற்கிடையே இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்த அவர், படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிறன்று, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நடிகை ராதிகா, அதில் தனது செல்லப்பிராணியுடன் நேரம் செலவிடுவது தொடங்கி, அவரும் அவரது கணவர் சரத்குமாரும் ஒர்க் அவுட் செய்வது வரையான விஷயங்களை அதில் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி உடற்பயிற்சி செய்கிறாரே என ராதிகாவை பாராட்டி வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: