சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸுடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இதனை இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2-வில், ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரமுகி 2-வின் பூஜை நடைப்பெற்றது. அதில் இயக்குநர் பி.வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரவி மரியா, ராதிகா சரத்குமார் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ப்ரோமோ!
First schedule wrap #Chandramukhi2 nothing but high energy with @offl_Lawrence #vadivelu on #Pvasu s sets @LycaProductions pic.twitter.com/NFk7DuKTyR
— Radikaa Sarathkumar (@realradikaa) August 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலுவுடன் தான் ஜாலியாக இருக்கும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ராதிகா சரத்குமார், “முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.