ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2-வது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய ராதிகா சரத்குமாரின் மகள்

2-வது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய ராதிகா சரத்குமாரின் மகள்

கணவர் மற்றும் குழந்தையுடன் ரேயான்

கணவர் மற்றும் குழந்தையுடன் ரேயான்

ராத்யாவின் பெயர் என் தாயின் பெயரிலிருந்து துவங்குகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் தனது இரண்டாவது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார்.

  சமீபத்தில் மணிரத்னம் கதை எழுதி தயாரித்த வானம் கொட்டட்டும் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராதிகா - சரத்குமார் ஜோடி இணைந்து நடித்தனர். தொடர்ந்து கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராதிகா சரத்குமார் தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

  ராதிகா சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தராக் எனப் பெயர் சூட்டினார்கள்.

  இதையடுத்து கடந்த மார்ச் 15-ம் தேதி ரேயானுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ராத்யா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

  இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரேயான், ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவளுடைய பெயர் என் தாயின் பெயரிலிருந்து துவங்குகிறது. என் அம்மாவைப் போல சிறப்பான வாழ்க்கை ராத்யாவுக்கும் அமையும்” என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: சினிமா தொழிலாளர்களுக்கு 100 அரிசி மூட்டைகள் வழங்கிய நடிகர் சூரி..!

  Published by:Sheik Hanifah
  First published: