லீக்கான படுக்கையறை காட்சி... சரமாரியாக கேள்விகளை எழுப்பிய ராதிகா ஆப்தே...!

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மக்கள் மேடையில் நிர்வாணமாக நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று ராதிகா ஆப்டே கூறியுள்ளார்

news18
Updated: July 18, 2019, 2:29 PM IST
லீக்கான படுக்கையறை காட்சி... சரமாரியாக கேள்விகளை எழுப்பிய ராதிகா ஆப்தே...!
ராதிகா ஆப்டே
news18
Updated: July 18, 2019, 2:29 PM IST
படுக்கையறை காட்சியில் நான் மட்டும் அல்ல தேவ் என்னுடன் இருக்கிறார் அதை பற்றி ஏன் யாரும் பேசவில்லை என்று ராதிகா ஆப்தே கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ராதிகா ஆப்தே. தொடர்ந்து வெற்றிசெல்வன், தோனி, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்தியிலும் பல படங்களில் நடித்து வரும் இவர், பல முன்னணி நடிகைகள் தயங்கும் கேரக்டர்களையும் துணிச்சலாக ஏற்று நடித்து வருகிறார்.

பாலிவுட் தவிர ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் ராதிகா ஆப்தே ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து    'தி வெட்டிங் கெஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தேவ் படேல், ராதிகா ஆப்தே நடித்திருக்கும் படுக்கையறை காட்சி இணையத்தில் கசிந்து வைரலாகியுள்ளது.


சமூக வலைதளங்களில் வெளியான பாலியல் காட்சி குறித்து ராதிகா ஆப்டே, ‘தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நிறைய அழகான காட்சிகள் இருக்கிறது. அந்த குறிப்பிட்ட பாலியல் காட்சி கசிந்து வைரலானது சமூகத்தின் மனநிலையை காட்டுகிறது. அந்தக் காட்சியில் நானும் தேவ் பட்டேலும் இருக்கிறோம். ஆனால் அதை பகிரும் போது என்னுடைய பெயரை பயன்படுத்தி பகிர்கின்றனர். ஏன் தேவ் பட்டேல் பெயரை பயன்படுத்தவில்லை’ என்று பேசியுள்ளார்.இதேபோல் அவர், ‘நான் உலக சினிமாக்களை பார்த்து வளர்ந்தவள். நிறைய இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மக்கள் மேடையில் நிர்வாணமாக நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய உடலை நான் மிகவும் விரும்புகிறேன்.

Loading...

நான் ஏன் என் உடலைப் பற்றி வெட்கப்பட வேண்டும். ஒரு நடிகராக நான் பயன்படுத்தும் ஒரு கருவிதான் என் உடல். இது மாதிரியான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் ராதிகா ஆப்டே கூறியுள்ளார்

Also watch

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...