தான் இயக்கிய முதல் குறும்படத்துக்கே சர்வதேச விருது பெற்ற ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படம் சர்வதேச விருது பெற்றுள்ளது.

தான் இயக்கிய முதல் குறும்படத்துக்கே சர்வதேச விருது பெற்ற ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
  • Share this:
பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தி ஸ்லீப்வாக்கர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். இதில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ராதிகா ஆப்தேவின் கணவர் பெனிடிக்ட் டெய்லர் இசையமைத்திருக்கும் இக்குறும்படம் தூக்கத்தில் நடக்கும் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

கொரோனா அச்சுறுத்தலால் சில திரைப்பட விழாக்கள் இணையத்திலேயே நடைபெற்று வரும் நிலையில் பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் ராதிகா ஆப்தே இயக்கிய தி ஸ்லீப்வாக்கர்ஸ் குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படம் என்ற விருதை பெற்றுள்ளது.


மேலும் படிக்க: சுமார் மூஞ்சி குமார் கேரக்டரில் மீண்டும் நடிக்கும் விஜய் சேதுபதி

இதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ராதிகா ஆப்தே, விருது விழா நடுவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக இயக்கம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், மேலும் இயக்குவதற்கான வாய்ப்புகள் தனக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் ராதிகா ஆப்தே.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading