• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Radhika Apte: விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ராதிகா ஆப்தே!

Radhika Apte: விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ராதிகா ஆப்தே!

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்த ரீமேக்கில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளார்.

  • Share this:
    விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கை புஷ்கர் - காயத்ரி இயக்குகின்றனர். இதில் வழக்கறிஞராக நடிக்க ராதிகா ஆப்தேயை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    விக்ரம் வேதா இந்தி ரீமேக் எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். யார் படத்தில் நடிப்பது என்பதில் தொடங்கியது சிக்கல். போலீஸ் அதிகாரி விக்ரமாக நடிக்க சயிப் அலிகானை ஒப்பந்தம் செய்தனர். கேங்ஸ்டர் வேதாவாக நடிப்பது யார் என்பதில் குழப்பம் நிலவியது. முதலில் ஹிர்த்திக் ரோஷனிடம் கேட்டனர். அவர் மறுக்க, அமீர்கானிடம் சென்றனர். முதலில் நடிப்பதாகச் சொன்னவர், படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்த முடியாத சூழல் ஏற்பட, படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு மீண்டும் ஹிர்த்திக் ரோஷனுடன் பேசினர். இறுதியாக அவர் நடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஹிர்த்திக் - சயிப் அலிகான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்த ரீமேக்கில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் இந்த வேடத்தை ஷ்ரத்தா ஸ்ரீநாத் செய்திருந்தார். விக்ரம் மாதவனின் ஜோடி. இந்தியில் இந்த வேடத்தில் ராதிகா ஆப்தே நடிக்கிறார். சயிப் அலிகானின் ஜோடியாக இவர் வருகிறார்.

    படப்பிடிப்பை விரைவில் தொடங்கி அடுத்த வருட ஆரம்பத்தில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனார். தமிழில் விக்ரம் வேதாவை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோ, இந்தி ரீமேக்கிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: