Home /News /entertainment /

Radhe Shyam: பிரபாஸின் ராதே ஷ்யாம் டீசர் தேதி அறிவிப்பு!

Radhe Shyam: பிரபாஸின் ராதே ஷ்யாம் டீசர் தேதி அறிவிப்பு!

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ டீசர் நேரடியாக ஆங்கில மொழியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

    இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 23-ஆம் தேதி, நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடுகிறது.

    இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, ‘ராதே ஷ்யாம்’ டீசர் நேரடியாக ஆங்கில மொழியில் வெளியிடப்படும் என்றும், ரசிகர்கள் இந்திய மொழிகளின் சப் டைட்டிலுடன் அதனைக் கண்டுகளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படக்குழு இதே பாணியில் டீசரை வெளியிட்டிருந்தது.





    ராதே ஷ்யாம் பட டீசர் அறிவிப்பை தொடர்ந்து, மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tollywood

    அடுத்த செய்தி