ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு... கிண்டலடித்த சமந்தா!

நீங்கள் எத்தனை எதிர் விமர்சனங்கள் சொன்னாலும் நான் மீண்டும் பேயாக, சீதாவாக, கடவுளாக, தோழியாக, மனைவியாக, காதலியாக என இன்னும் பல கதாபாத்திரங்களை என் ரசிகர்களுக்காக ஏற்று நடிக்கத்தான் போகிறேன்” - நயன்தாரா

news18
Updated: March 26, 2019, 12:45 PM IST
ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு... கிண்டலடித்த சமந்தா!
நடிகை சமந்தா
news18
Updated: March 26, 2019, 12:45 PM IST
ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகை சமந்தா கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்தப் பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

நடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார்.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, “ராதாரவி தான் செய்ததை சரி என்று நிரூபிக்க போராடுகிறார். அவரைப் பார்த்தால் பாவமாக உள்ளது. உங்கள் ஆத்மா அல்லது அது எதுவாக இருந்தாலும் அமைதியைத் தேட விழைகிறேன். நயன்தாராவின் சூப்பர் ஹிட் பட டிக்கெட்டை அனுப்புகிறோம். பாப்கார்ன் மற்றும் மாத்திரையுடன் படம் பார்த்து மன அமைதியடையுங்கள்” என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.Watch Video: நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியானது

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...