நயன்தாராவை ராதாரவி கொச்சைப்படுத்த இதுதான் காரணம் - 90 எம்.எல் பட இயக்குநர்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி பேச்சு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

news18
Updated: March 25, 2019, 2:12 PM IST
நயன்தாராவை ராதாரவி கொச்சைப்படுத்த இதுதான் காரணம் - 90 எம்.எல் பட இயக்குநர்
இயக்குநர் அனிதா உதீப்
news18
Updated: March 25, 2019, 2:12 PM IST
ஒரு வெற்றிகரமான பெண்ணை மேடையில் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துவதன் மூலம் ட்ரெண்டிங்கில் முந்த முயற்சி செய்திருக்கிறார் ராதாரவி என்று 90 எம்.எல் பட இயக்குநர் அனிதா உதீப் கூறியுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி பேச்சு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்த் திரைத்துறையினர் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

ராதாரவியின் சர்ச்சைப்பேச்சைக் கண்டிக்கும் விதமாக திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் சர்ச்சை ஏற்படுத்திய 90 எம்.எல் படத்தின் இயக்குநர் அனிதா உதீப், ராதாராவியின் பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ராதாரவி திரைத்துறையில் தான் ஒரு மிகப்பெரிய ஆணாதிக்கவாதி என்றும் அப்படி இருந்தும் தன்னை யாரும் கண்டுகொள்வதில்லையே என்று கவலைப்பட்டிருக்கிறார். இப்படி இருந்தும் கூட தனது ஜுனியர்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள். தான் அவர்களை எப்படி முந்துவது என நினைத்து இதனை செய்திருக்கிறார்.

அதனால் தான் தென்னிந்திய சினிமாவில் ஒரு வெற்றிகரமான பெண்ணை மேடையில் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துவதன் மூலம் ட்ரெண்டிங்கில் முந்த முயற்சி செய்திருக்கிறார் போல” என்று கூறப்பட்டுள்ளது.நயன்தாராவை பற்றி தவறாக பேசவில்லை - ராதாரவி விளக்கம் - வீடியோ

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...