டப்பிங் யூனியனுக்கு வைக்கப்பட்டிருக்கும் சீலை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக ராதாரவி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
டப்பிங் கலைஞர்களுக்கு என தனி அலுவலகம் வடபழனி விஜயராகவபுரத்தில் இயங்கி வருகிறது. சொந்த இடத்தில் கட்டடம் கட்டி அந்த அலுவலகம் இயங்குகிறது. அதற்கு நடிகர் ராதாரவி தலைவராக உள்ளார். டப்பிங் யூனியன் கட்டிடம் இயங்கும் இடம் 2011ல் வாங்கப்பட்டுள்ளது. அப்போது நிலமாக வாங்கி கட்டடம் கட்டியதாக அரசுக்கு கூறியுள்ளனர்.
ஆனால் கட்டடத்துடன் கூடிய இடத்தை வாங்கி அதிலிருந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, அதன் பிறகு புதிய கட்டடத்தை கட்டியுள்ளனர். ஆனால் அந்த புதிய கட்டிடம் கட்டியதற்கு அரசு தரப்பில் இருந்து முறையான அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. எனவே, அது குறித்து ஆய்வு செய்து உத்தரவிடும்படி வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள் ராதாரவியிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.
அத்துடன் விதிகளுக்கு உட்பட்டுதான் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அதன் இறுதியில் டப்பிங் யூனியன் கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டு இருப்பதாகவும் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தலைவர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராதாரவி தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பேசி பேஸ்புக்கில் நேரலை - இளைஞரை கைது செய்த காவல்துறை
இந்த நிலையில் ராதாரவியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ’இந்த சீலை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும், அது குறித்த நடவடிக்கைகளை திங்கட்கிழமை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த சீல் கட்டிடத்திற்கு வைக்கப்பட்டு இருப்பதால் அலுவலகம் வேறு இடத்தில் இயங்கும். அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Radharavi