நாடகத்தின் கதையை திருடித்தான் ஷங்கர் படம் எடுத்தார் என்பதை அடித்துச் சொல்வேன் - ராதாரவி

நாடகத்தின் கதையை திருடித்தான் ஷங்கர் படம் எடுத்தார் என்பதை அடித்துச் சொல்வேன் - ராதாரவி
நடிகர் ராதாரவி
  • News18
  • Last Updated: March 8, 2020, 12:32 PM IST
  • Share this:
நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது அப்போது மேடையில் பேசிய ராதாரவி, “எனக்கு திமிரு என்பது உள்ளேயே இருக்கிறது ஆரம்பகாலத்திலிருந்து சொல்கிறேன். ஒய்.ஜி மகேந்திரனின் நாடகக் கதையை கதையை பலர் திருடிவிட்டனர்.

பிரபல இயக்குனர் ஷங்கரும் ’ரூபாய்க்கு மூணு கொலை’ என்ற நாடகத்தின் போது ஓரமாக அமர்ந்திருப்பார்.  அந்த நாடகங்களைப் பார்த்து அதிலிருந்து தான் இரட்டை வேடங்களில் உள்ள கதையை எடுத்துள்ளார் என அடித்துச் சொல்வேன்” என்று கூறினார். மேலும், NRC & NPR மூலம் அப்பா பெயரை கேட்டால் கோவப்படுகிறார்கள் என்றார்.
”CAA பற்றித் தெரிந்தவர்கள் போராட மாட்டார்கள். எதற்காக போராடுகிறார்கள் என்று அறிவாலயத்தில்தான் கேட்க வேண்டும். சட்டப்பேரவையில் முதல்வரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் வெளி நடப்பு செய்கிறார். கேள்விக்கு பதில் சொல்லாமல், இந்தியாவில் அமைதியை குலைக்க வேண்டாம்” என்றும் அவர் கூறினார்.

நல்ல நாடகங்களை போடுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் முதல் முறையாக பாஜக அரசு ஒரு தமிழரை பதவியில் அமர்த்தியுள்ளது என்றும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட ராதாரவி, பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Also Read: காஞ்சிபுரம் நபருக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட 27 பேர்...!


Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading