நடிகர் ராதாரவி மீது போலீசார் வழக்குப்பதிவு

நடிகர் ராதாரவி மீது போலீசார் வழக்குப்பதிவு

நடிகர் ராதாரவி

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தமுறை பெண்களை இழிவுபடுத்தி பேசி முதலாவதாக சர்ச்சையில் சிக்கியவர் திமுக எம்.பி.ஆ.ராசா. அவரது பேச்சுக்கு பிரதமர் தொடங்கி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் இது தேர்தல் பிரசாரமாகவும் மாறியது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆ.ராசாவின் பேச்சு தன்னை காயப்படுத்தி விட்டதாகக் கூறி வாக்கு சேகரிப்பின் போது கூறி கண்ணீர் வடித்தார். இதையடுத்து ஆ.ராசா தனது பேச்சு முதல்வரை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியிருந்தார் ஆ.ராசா.

ஆ.ராசாவைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ‘துக்கடா  அரசியல்வாதி’ என்று விமர்சிக்கப்பட்டிருந்தது. பதிலுக்கு வானதி சீனிவாசனும் கமல்ஹாசன் லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் என்று சர்ச்சையாகக் கூறி விமர்சித்தார்.

இந்நிலையில் சர்ச்சை பேச்சையே தனது அடையாளமாக கொண்டிருக்கும் நடிகர் ராதாரவி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடிகர் கமலஹாசன் குறித்து பேசும் போது பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.

அதைப்பார்த்த தேர்தல் அதிகாரி சிவசுப்ரமணியன் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்துதல் (509 IPC) என்ற பிரிவில் ரேஸ்கோர்ஸ் போலீசார் ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: