ரஜினி சம்பந்திக்கு பாஜகவில் புதிய பதவி - யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?

தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் தமிழக திரைத்துறை பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். 

ரஜினி சம்பந்திக்கு பாஜகவில் புதிய பதவி - யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?
ராதாரவி | ரஜினிகாந்த்
  • Share this:
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் காமராஜர் படத்திற்கு பாஜக தலைவர் முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி,, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகை காயத்திரி உட்பட மாநில  நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.

எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா, முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜகவின் முக்கிய பதவிகளுக்கான பெயர் பட்டியலை இரண்டாவது முறையாக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.


அப்பொழுது திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவிக்கு கடந்த பட்டியலில் பதவி வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அவருக்கு பதவி வழங்குவது குறித்த அறிவிப்பை பாஜக தலைவர் முருகன் வெளியிட்டார்.

அதன்படி திமுக , அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த  நடிகர் ராதாரவிக்கு  பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினிகாந்தின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா மற்றும் இசையமைப்பாளர், கங்கை அமரன் ஆகியோரும் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சந்தனகடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே.சுரேஷ் மாநில OBC அணிக்கு மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுளார்.இயக்குநர் பேரரசு, பெப்சி சிவா, தீனா ஆகியோர் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு தொடர்பு பிரிவுக்கு ஓய்வு பெற்ற சந்திரலேகா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading