Home /News /entertainment /

Otha Seruppu Size 7: 2 தேசிய விருதுகளை வென்ற பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’!

Otha Seruppu Size 7: 2 தேசிய விருதுகளை வென்ற பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’!

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு

திரையில் தெரியும் பார்த்திபனுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையேயான உரையாடலும், உணர்வுப் பூர்வமான புரிதலும் தான் ஒத்த செருப்பு சைஸ் 7.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் ஒத்த செருப்பு படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

    இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, ஒரே ஆளாக நடித்திருந்தப் படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்திபன் தனது தயாரிப்பு நிறுவனமான, பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்துள்ளார்.

    National Award: தேசிய விருதை வென்ற ’அசுரன்’ தனுஷ், ’ஒத்த செருப்பு’ பார்த்திபன்!

    ஒரு நபரே எழுதி, இயக்கி, நடித்து தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. காவலாளியாக வேலை பார்க்கும் நடுத்தர வயது மனிதன் மாசிலாமணி ஒரு கொலைக்குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டு விசாரணையில் இருக்க, அவரது நோயுற்ற மகன் விசாரணை அறைக்கு வெளியில் காத்திருக்கிறார். திரையில் தெரியும் பார்த்திபனுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையேயான உரையாடலும், உணர்வுப் பூர்வமான புரிதலும் தான் ஒத்த செருப்பு சைஸ் 7.

    இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றது. இந்நிலையில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவில் சிறப்பு விருதையும் (ஸ்பெஷல் ஜூரி), சிறந்த ஒலிப்பதிவுக்கான (ரசூல் பூக்குட்டி) விருதையும் தட்டிச் சென்றுள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனுக்கு இந்த தேசிய விருது இன்னும் உற்சாகத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Parthiban, National award

    அடுத்த செய்தி