வெற்றியோ தோல்வியோ தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பார்த்திபன் என்றுமே தயங்குவதில்லை. ஒத்த செருப்பு படத்தில் அவர் மட்டுமே திரையில் தோன்றி ஆச்சயரியத்தை ஏற்படுத்தினார். அதற்கு அடுத்த ஒட்டுமொத்த படத்தையும் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக எடுத்து இந்திய திரையுலகையே மிரள வைத்தார். அது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமா இல்லையா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அவரது முயற்சிக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தது.
தற்போது தனது ஒத்த செருப்பு படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தனது முதல் படமான புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்திபன் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு அவர் ’டார்க் வெப்’ என பெயர்வைத்தள்ளார்.
34 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் இந்தப் படம் தற்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாகவுள்ளதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கவிட்டதாகவும் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை 1990 ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படம் சிறந்த தமிழ் படம் என்ற பிரிவில் தேசிய விருதையும்,சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகை மனோராமாவுக்கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Parthiban