ராதாரவிக்கு வாய்ப்பு தரவேண்டாம் : விஸ்வாசம் பட நிறுவனம் அறிக்கை

news18
Updated: March 25, 2019, 12:19 PM IST
ராதாரவிக்கு வாய்ப்பு தரவேண்டாம் : விஸ்வாசம் பட நிறுவனம் அறிக்கை
ராதாரவி
news18
Updated: March 25, 2019, 12:19 PM IST
ராதாரவியின் பேச்சைக் கண்டித்திருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் எங்களுடைய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் திரைத்துறையில் இருக்கும் தங்களது நண்பர்களும் அவரை எந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மூத்த நடிகர் ராதாரவி, “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகள், நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார்.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இயக்குநர் விகேஷ் சிவன் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை ட்விட்டரில் வலியுறுத்தினார். இதற்காக அவரை திமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன்.இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ஒரு மதிப்புமிக்க நடிகர் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், அந்தப் படத்தின் நடிகையை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். பார்வையாளர்கள் அப்பேச்சை ரசித்துள்ளார்கள். ஒரு மூத்த நடிகருக்கு மரியாதை தரும் விதமாக நாம் இந்தளவுக்கு கீழிறங்கிப் போகிறோம். நயன் தாராகுறித்தும் பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் ராதாரவி பேசியது சரியல்ல. இப்போதாவது அவருக்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். இதனால் மாற்றம் ஏற்படுமா? அதைப் பற்றிக் கவலை வேண்டாம். குரல் கொடுங்கள். சரியான நபர்களுக்கு கேட்கும் வரை குரல் கொடுங்கள்.

நடிகர் சங்கம் இதைக் கவனிக்கும் என எண்ணுகிறோம். ராதாரவிக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, எங்களுடைய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரைத்துறையில் உள்ள எங்களுடைய நண்பர்களும் அவரை எந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நம் பெண்களுக்கு நான் ஆதரவளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Loading...முன்னதாக இது குறித்து விளக்கமளித்த நடிகர் ராதாரவி, “நயன்தாராவைப் பற்றி நான் தவறாக பேசவில்லை. நான் பேசியது அரசியலாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளரிடம் சமாதானமாகும் நடிகை ஸ்ரீரெட்டி! - வீடியோ

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...