முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கைகளை விட்டு புல்லட் ஓட்டும் ரச்சிதா... வைரலாகும் வீடியோ!

கைகளை விட்டு புல்லட் ஓட்டும் ரச்சிதா... வைரலாகும் வீடியோ!

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி

32 வயதான ரச்சிதா சமீபத்தில் 'பிக் பாஸ் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக் பாஸ் பிரபலம் ரச்சிதா தான் பைக் ஓட்டும் த்ரோபேக் வீடியோவை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடிகையும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளருமான ரச்சிதா ராயல் என்ஃபீல்டு பைக்கை இரு கைகளையும் விட்டு ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரச்சிதாவின் அந்த த்ரோபேக் வீடியோ கிளிப் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரச்சிதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியின் ஃபேவரிட் போட்டியாளர்களில் ஒருவர். ஆர்வத்துடன் விளையாடிய அவர், 91-வது நாளில் வெளியேறினார். அப்போது ரசிகர்கள் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் இதயங்களையும் வென்றார்.


'பிக் பாஸ் 6' நிகழ்ச்சியில் ரச்சிதா அவரது விளையாட்டுத் திறமைக்காகப் பாராட்டப்பட்டார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் பைக் ரைடிங் வீடியோவை மறுபதிவு செய்துள்ளார். ”எதுவாக இருந்தாலும் உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுங்கள்” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 32 வயதான ரச்சிதா சமீபத்தில் 'பிக் பாஸ் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதோடு புதிய சீரியல்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv