• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Raashi Khanna: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா!

Raashi Khanna: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா!

ராஷி கண்ணா - அஜய் தேவ்கன்

ராஷி கண்ணா - அஜய் தேவ்கன்

இந்த வெப்சீரிஸை பிபிசி ஸ்டுடியோஸ் இந்தியில் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்டுடன் இணைந்து தயாரிக்கிறது.

  • Share this:
    பிபிசி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் வெப் சீரிஸில் மைய கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கானும், முக்கிய வேடத்தில் ராஷி கண்ணாவும் நடிக்கின்றனர்.

    உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் வெப் சீரிஸ்கள் தயாராகின்றன. அதில் நூற்றுக்கணக்கானவை பெரும்பாலான பார்வையாளர்களை சென்றடைவதில்லை. குறிப்பிட்ட வெப் சீரிஸ்களே காலம் கடந்தும் பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளன. க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்களில் அப்படி பார்வையாளர்களின் விருப்பத்தை வென்ற சீரிஸ், லூதர். பிபிசி தயாரித்த இந்த யுகே வெப்சீரிஸ் இதுவரை 5 சீஸன்கள் வெளியாகியுள்ளது. யுகே-யின் சீரியஸ் க்ரைம் யூனிட்டில் பண்புரியும் ஜான் லூதர் என்கிற டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் எப்படி கொலைகளை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வெப்சீரிஸை பிபிசி ஸ்டுடியோஸ் இந்தியில் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்டுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் ஜான் லூதார் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். சீரிஸில் அவரது பெயர் ருத்ரா. அதனால், ருத்ரா - தி எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ் என்று சீரிஸுக்கு பெயர் வைத்துள்ளனர்.

    லூதரில் ரூத்வில்சன் நடித்த கதாபாத்திரத்தில் ராஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரமாண்டமாக மிகுந்த பொருட்செலவில் ருத்ரா தயாராகிறது. ராஜேஷ் மபூஸ்கர் இந்தத் தொடரை இயக்குகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: