Raashi Khanna: ராஷி கண்ணா தனது அண்ணனுக்கு செய்த ஹோலி பிராங்க் - க்யூட் வீடியோ!

Raashi Khanna: ராஷி கண்ணா தனது அண்ணனுக்கு செய்த ஹோலி பிராங்க் - க்யூட் வீடியோ!

அண்ணனுடன் ராஷி கண்ணா

தனது அண்ணனுக்கு ஹோலி பிராங்க் கொடுத்த நடிகை ராஷி கண்ணாவின் வீடியோ ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

  • Share this:
    தனது அண்ணனுக்கு ஹோலி பிராங்க் கொடுத்த நடிகை ராஷி கண்ணாவின் வீடியோ ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

    நடிகை ராஷி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அதோடு மெட்ராஸ் கஃபே போன்ற பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் க்யூட் வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Raashii Khanna (@raashiikhanna)






    ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் விதமாக தனது சகோதரருடன் குறும்புத்தனத்தில் ஈடுபடுகிறார் ராஷி. கையில் கலர் பொடிகளை பிடிக்கச் சொல்லி கொடுத்து, தனது சேட்டையால், அவர் முகத்தில் கலர் படுமாறு செய்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவுக்கு தற்போது வரை 4.80 லட்சத்துக்கும் மேலானவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

    Vadivelu: ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரியாகும் வடிவேலு?

    ”குழந்தைகளாக இருந்த போது, அவர் குறும்புக்காரராக இருந்தார், இப்போது அட்டவணைகள் மாறிவிட்டன. ஹேப்பி ஹோலி ப்ரோ” என வாழ்த்துகளை தனது அண்ணனுக்கு தெரிவித்து அந்த வீடியோவையும் ராஷி கண்ணா பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: