• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முதல்நாளே கசிந்த தனுஷ் ராஷி கண்ணா திருச்சிற்றம்பலம் புகைப்படம்!

முதல்நாளே கசிந்த தனுஷ் ராஷி கண்ணா திருச்சிற்றம்பலம் புகைப்படம்!

தனுஷ்

தனுஷ்

முதல்நாளே படப்பிடிப்புத்தள புகைப்படம் கசிந்தது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனுஷ் நடிப்பில் மித்ரன் கே.ஜவஹர் இயக்கும் படம் திருச்சிற்றம்பலம். தனுஷ், ராஷி கண்ணா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் படமாக்கிவரும் நிலையில், ராஷி கண்ணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட முதல்நாளே படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தை முடித்த தனுஷ் அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. செல்வராகவன், சேகர் கம்முலா, ரவிக்குமார் உள்பட பல இயக்குனர்கள் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளனர். இந்த பட்டியலை ஓவர்டேக் செய்து, மித்ரன் கே.ஜவஹர் தனுஷின் கால்ஷீட்டை கைப்பற்றினார். தனுஷ் நாயகன், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் என்று ஆரம்பமே தடதடத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சிற்றம்பலத்தின் படப்பிடிப்பில் முதல் நாயகியாக ராஷி கண்ணா கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்புதளத்தில் வசனத்தை மனப்பாடம் செய்யும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், தனுஷுடன் அவர் இருக்கும் படப்பிடிப்புத்தள புகைப்படம் ஒன்றும் இணையத்தில் கசிந்துள்ளது



Also read... அக்ஷய் குமாரின் ஸ்பை த்ரில்லருக்கு அரபு நாடுகள் தடை...!

முதல்நாளே படப்பிடிப்புத்தள புகைப்படம் கசிந்தது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருச்சிற்றம்பலத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: