• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரைவிமர்சனம் : 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படம் எப்படி உள்ளது?

திரைவிமர்சனம் : 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படம் எப்படி உள்ளது?

இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்

இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்

அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகியுள்ள ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Share this:
நடிகர் சூர்யா தயாரிப்பில் அர்சில் மூர்த்தி என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் மிதுன் ரம்யா பாண்டியன் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும். திருமண சீராக வழங்கப்படும் இரண்டு காளை மாடுகளை குழந்தை போல பாவித்து வளர்த்து வருகின்றர். மிதுனும், ரம்யா பாண்டியனும்.

வெள்ளையன் கருப்பன் என்ற இரண்டு காளைகளை காணாமல் வாட, காளை மாடுகளை தேடி தொடங்கும் பயணத்தில் ஏழை விவசாயிகளுக்கு போலியாக வழங்கப்படும் நலத்திட்டங்கள், நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களின் பெயரால் நடத்தப்படும் ஊழல் என பல்வேறு சமூக அவலங்களை சமரசமின்றி கேலி செய்கிறது இந்த திரைப்படம். கிராமங்களில் எளிய மக்கள் வாழ்க்கைமுறையை அப்படியே பதிவு செய்ய முயற்சித்து உள்ள இந்தத் திரைப்படம் சமகால அரசியல் தலைவர்கள் பலரையும் பகடி செய்து உருவாகியுள்ளது.

காளை மாட்டிற்கும் ஒரு ஏழை குடும்பத்திற்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து தொடங்கும் படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியல் நையாண்டி திரைப்படமாக இரண்டாவது பாதியில் மாறிவிடு படத்தின் கரு என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. எனினும் ஜனரஞ்சகம் என்ற சொதப்பலான திரைப்படங்களுக்கு நடுவே குறைந்த செலவில் எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு புதிய முயற்சியாக இந்த திரைப்படத்தை கொண்டாடலாம்.

அமேசான் வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் மூலம் பாடகர் கிருஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவரது இசை பல காட்சிகளையும் எதார்த்தமாக ரசிக்க வைப்பது படத்திற்கு பலமாக பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: