CINEMA RAAI LAXMI GETTING ENGAGED HER INTERESTING COVID 19 AWARENESS POST SCS
Raai Laxmi: நடிகை ராய் லட்சுமிக்கு நிச்சயதார்த்தம்? அவரே வெளியிட்ட பதிவு!
ராய் லட்சுமி
கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியிருக்கும் இந்நேரத்தில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகை ராய் லட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியிருக்கும் இந்நேரத்தில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகை ராய் லட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
அப்படி என்ன சொன்னார் என்கிறீர்களா? “சரி, நீண்ட காலமாக நிறைய பேர் என்னிடம் கேள்விகளைக் கேட்டு வருவதால், இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்தேன். முதலில் நான் எனது ரிலேஷன்ஷிப்பை மறைக்கவில்லை. இது யாருடைய வேலையும் இல்லை என்று நான் நினைக்கவில்லை, அதோடு எனக்கு சில தனிப்பட்ட இடமும் தேவை. எனது பார்ட்னரின் நல்வாழ்வைப் பாதுகாக்க வேண்டும்.
ஆமாம், கடந்த வாரம் நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பினோம். நாங்கள் ஏப்ரல் 27, 2021 அன்று நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ளப் போகிறோம். இதற்கான ஏற்பாடுகள் எதிர்பாராத விதமாக நடந்தது. ஆனால் எனது குடும்பத்தினர் இதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதனால் என் வாழ்க்கையின் காதலோடு இணைய காத்திருக்க முடியாது. உங்கள் கைகளை சரியாகக் கழுவவும், தேவைப்படும்போது சானிடிசரைப் பயன்படுத்தவும். அதை உங்களுக்கு நினைவூட்டுவதற்காக நான் இந்த போஸ்ட்டை வேறு ஒருவரிடமிருந்து திருடினேன்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
ராய் லட்சுமியின் இந்த பதிவை புரிந்துக் கொள்ளாதவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலை வீசுவதால், ரசிகர்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்ய அவர் பதிவிட்ட விழிப்புணர்வு பதிவு தான் அது.