பார்த்திபன் எழுதி இயக்கி நடித்திருக்கும் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவு நிழலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளனர்.
படத்திற்கு படம் வித்தியாசமான கதையையும், கதைக் களத்தையும் தேர்வு செய்கிறவர் பார்த்திபன். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. அதில் அவர் மட்டுமே நடித்திருந்தார். ஒரே ஒரு நபர் நடித்த திரைப்படம் என்ற வகையில் அது விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. அதையடுத்து அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் இரவின் நிழல்.
இதையும் படிங்க.. விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!
இந்தப் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது எந்த 'கட்'டும் இல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.
உலகில் சிங்கிள் ஷாட் திரைப்படங்கள் நிறைய எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் பார்த்திபனின் இரவின் நிழலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், இந்தத் திரைப்படம் நான்-லீனியராக எடுக்கப்பட்டுள்ளது. நான்-லீனியராக எடுக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை இரவில் நிழல் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சம் இதற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இரவின் நிழலின் முதல் பார்வையை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். பார்த்திபன் வெளியிட்டிருக்கும் குறிப்பில், "மணி சார் (thanks) வெளியிட்ட F Lookக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது-முழுவதும் organic! முடிந்தவரை நானும் retweet’s செய்தேன். இயன்றவரை பரப்புங்கள். இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும். பலரும் பகிர்ந்து ஊக்கப் படுத்துங்கள் நண்பர்களே" என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு நடந்த நல்ல விஷயம்.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!
ஒத்த செருப்பு போலவே இரவின் நிழலும் பல்வேறு விருதுகளை வெல்லும், ரசிகர்களின் அமோக வரவேற்பை பெறும் என்கிறார்கள், படத்தில் பணியாற்றியவர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Parthiban, Kollywood, Tamil Cinema