‘ஆடை’ என்னுடைய குடைக்குள் மழை படத்தின் கதை - பார்த்திபன்!

ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

news18
Updated: July 21, 2019, 3:49 PM IST
‘ஆடை’ என்னுடைய குடைக்குள் மழை படத்தின் கதை - பார்த்திபன்!
அமலாபால் | பார்த்திபன்
news18
Updated: July 21, 2019, 3:49 PM IST
ஆடை படத்தின் கதைக்கருவும் குடைக்குள் மழை படத்தின் கதைக்கருவும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட தனது நண்பர்களுடன் வெளியே செல்லும் அமலாபால், ஆடையின்றி ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் கதை. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


நேற்று திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது. வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 வருடங்களுக்கு பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும், (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது” என்று கூறியுள்ளார்.முன்னதாக அயோக்யா படம் வெளியான சமயத்தில் அந்தப் படம் தன்னுடைய உள்ளே வெளியே படத்தின் காப்பி என்றும், இவ்வாறு காப்பியடிப்பது அயோக்கியத்தனம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பின்னர் அந்த ட்விட்டுக்கு விளக்கமளித்திருந்த பார்த்திபன், அயோக்யா படம் குறித்த எனது பதிவு ஒரு விளம்பர யுத்தி என்று கூறியிருந்தார்.

வீடியோ பார்க்க: கனவு நாயகன் விஜய் தேவரகொண்டா நேர்காணல்

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...