முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் அறியாமையை உணர்கிறேன்... பஞ்சாங்க சர்ச்சை குறித்து விளக்கமளித்த மாதவன்!

என் அறியாமையை உணர்கிறேன்... பஞ்சாங்க சர்ச்சை குறித்து விளக்கமளித்த மாதவன்!

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

ராக்கெட்ரி படத்தில் மாதவன், ரவி ராகவேந்திரா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெறுகிறார்கள்.

  • Last Updated :

பஞ்சாங்க சர்ச்சை குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’படத்தை  ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்த படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இப்படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானி கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். அவர் மீது மோசடி குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டு, தேச துரோகி பட்டம் கட்டப்படுகிறது. இதிலிருந்து மீண்டு, தான் ஒரு துரோகி அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியில் தன் வாழ்நாளை நம்பி நாராயணன் செலவழித்துள்ளார். இந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்ரி படத்தில் மாதவன், ரவி ராகவேந்திரா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெறுகிறார்கள்.  படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மாதவன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றன. இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல் என்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினார்கள் என்று தெரிவித்தார்.

மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம்" என்று அழைத்தேன். இந்த விமர்சனங்களுக்கு நான் தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன். அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்." என்று பதிவிட்டுள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Madhavan