HOME»NEWS»ENTERTAINMENT»cinema quota to arrive as diwali delight in theatres msb

தீபாவளிக்கு தியேட்டரில் வெளியாகிறது ‘கோட்டா’

தீபாவளிக்கு ‘கோட்டா’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு தியேட்டரில் வெளியாகிறது ‘கோட்டா’
கோட்டா மூவி ஸ்டில்
  • Share this:

அமுதவாணன் இயக்கத்தில் ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2 வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வெற்றியாளர் நிஹாரிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘கோட்டா’. இவர்களுடன் விஜய் டிவி தேன்மொழி பி. ஏ. சீரியல் புகழ் ஆதில், நக்கலைட்ஸ் புகழ் செல்லா, சஜி சுபர்ணா, ‘மானஸி’ நரேஷ், ‘அப்பா’ ரவி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

கேமராமேனாக படத்தின் இயக்குநர் அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு பணியாற்றியுள்ளனர். ஆலன் செபாஸ்டின் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தில் வினோத் ஸ்ரீதர் எடிட்டராக பணியாற்றியுள்ளார். இதுவரை 43 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கும் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

அதேபோல் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் ‘இரண்டாம் குத்து’ திரைப்படம் தீபாவளி ரிலீசை உறுதி செய்துள்ளது.



ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படமும் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக இருப்பதை உறுதி செய்திருக்கிறது.

இந்த வருட தொடக்கத்தில் தெலுங்கில் வெளியான‘சரிலேரு நீக்கெவரு’ தமிழில் டப் செய்யப்பட்டு ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்ற டைட்டிலுடன் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு, ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.



இந்த படங்கள் தவிர எம்.ஜி.ஆர் மகன், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ஓடிடி தளங்களில் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: