Home /News /entertainment /

குறையும் ஒமைக்ரான் தொற்று... உற்சாகப்படுத்தும் வலிமை வசூல் - பி.வி.ஆர் நிர்வாகம்

குறையும் ஒமைக்ரான் தொற்று... உற்சாகப்படுத்தும் வலிமை வசூல் - பி.வி.ஆர் நிர்வாகம்

வலிமை

வலிமை

திரையரங்குகளுக்குச் செல்வதில் பார்வையாளர்கள் இப்போது உற்சாகமாக இருக்கிறார்கள் என்று அவர் விரிவாகக் கூறினார்.

    ஒமைக்ரான் தாக்கம் குறைந்து வரும் நிலையில் வலிமை படத்தின் வசூல் ஊக்கமளிப்பதாக பி.வி.ஆர் திரையரங்கம் தெரிவித்துள்ளது.

    நெட்வொர்க் 18 உடனான நேர்காணலில், PVR CFO நிதின் சூட், ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரானால் முன்பதிவுகள் பாதித்ததாகவும், ஆனால் இப்போது பழைய நிலைக்கு திரையரங்குகள் திரும்பி வருவதாகவும் கூறினார். மூன்றாம் காலாண்டில் சராசரி டிக்கெட் விலை 14 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

    “பார்வையாளர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு அதிக அளவில் வருகிறார்கள். இது சினிமாவுக்கு நல்ல செய்தி. பார்வையாளர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வர தயாராக இருக்கிறார்கள் என்பதையும், வரவிருக்கும் பெரிய படங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என்பதையுமே இது காட்டுகிறது.

    எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

    டிக்கெட், உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றிலும் வலுவான வளர்ச்சியை காண்கிறோம். ஒமைக்ரான் காரணமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பாதிப்பு ஏற்பட்டது, ஆனால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, திரைப்படங்கள் ரிலீஸாக தொடங்கியுள்ளதால், மார்ச் மாதம் சினிமா வணிகத்திற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கும்” என்று சூட் குறிப்பிட்டுள்ளார்.

    விஜயகாந்தின் கம்பீர தோற்றம் எங்கே... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

    திரையரங்குகளுக்குச் செல்வதில் பார்வையாளர்கள் இப்போது உற்சாகமாக இருக்கிறார்கள் என்று அவர் விரிவாகக் கூறினார். கடந்த வெள்ளியன்று வெளியான மூன்று படங்களும் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நன்றாகவே பிரதிபலிக்கிறது. வசூல் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட நிதின் சூட், கங்கிபாய் கத்தியவாடி வார இறுதியில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறினார். வலிமையின் ஓப்பனிங் வசூல், தொற்றுநோய் காலத்தில் ஒரு தமிழ் படம் பெறும் அதிகபட்ச வசூலாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema, Valimai

    அடுத்த செய்தி