முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தியாவிலேயே முதன்முறை.... சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறப்பு!

இந்தியாவிலேயே முதன்முறை.... சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறப்பு!

சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கம்

சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கம்

ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்குகளில் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ரூ.250 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், கார் பார்க்கிங் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் முன்கூட்டியே விமானத்திற்காக வந்து காத்திருக்கும் பயணிகள், விமானத்தில் சென்னை வந்து மாற்று விமானத்திற்கு அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இதனை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும் நடன நிகழ்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்படு காட்சிபடுத்தப்பட்டன.

சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்புப் பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்குகளில் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம். மேலும் கட்டிமுடிக்கப்படுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் உள்ளிட்டவை கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளன. இதனால் விமானநிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது.

இந்தியாவிலேயே முன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai Airport