மோடி 21 நாள் லாக்டவுன் அறிவிச்சிருக்கார்... 5 இயக்குநர்கள் படைத்திருக்கும் ‘புத்தம் புதுக் காலை’ ட்ரெய்லர் ரிலீஸ்

Youtube Video

‘புத்தம் புதுக் காலை’ படத்தின் டீசரை மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.

 • Share this:
  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் உத்தமவில்லன் பட நடிகர் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

  ‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

  ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

  அமேசான் ப்ரைம் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 5 வித்தியாசமான கதைகள் ஊரடங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. படத்தின் ட்ரெய்லர் ‘மோடி 21 நாள் லாக்டவுன் அறிவிச்சிருக்கார்’ என்ற வசனத்துடன் தொடங்குகிறது.
  Published by:Sheik Hanifah
  First published: