• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புத்தம் புதுக்காலை ஆந்தாலஜி இரண்டாம் பாகம் - இயக்குனர்கள் யார் தெரியுமா?

புத்தம் புதுக்காலை ஆந்தாலஜி இரண்டாம் பாகம் - இயக்குனர்கள் யார் தெரியுமா?

கொரோனா பேரிடர் பின்புலம் மட்டுமே இந்த இரண்டாம் பாகத்துக்கும், முதல் பாகத்துக்குமான ஒற்றுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
புத்தம் புதுக் காலை 2020 இல் வெளிவந்த ஆந்தாலஜி. இதன் இரண்டாம் பாகம் டிசம்பரில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

ஓடிடி தளங்கள் வந்த பிறகு தமிழில் ஆந்தாலஜிகள் அதிகம் எடுக்கப்பட ஆரம்பித்தன. 2020 இல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஆந்தாலஜிதான் புத்தம் புதுக் காலை. கொரோனா பேரிடர் பின்னணியில் ஐந்து முன்னணி இயக்குனர்கள் இயக்கி ஐந்து தனித்தனி குறும்படங்களின் தொகுப்பு இந்த புத்தம் புதுக் காலை.

சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ மேனன், சுஹாசினி, ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ஐந்து தனித்தனி கதைகளை இயக்கியிருந்தனர். கொரோனா பேரிடர் காலம் என்பது மட்டும் அனைத்துக் கதைகளின் பின்புலமாக இருந்தது. அக்டோபர் 16 அமேசான் பிரைம் வீடியோவில் இந்த ஆந்தாலஜி வெளியானது

ஜெயராம், ஊர்வசி, கல்யாணி ப்ரியதர்ஷன், ஆன்ட்ரியா உள்ளிட்ட திறமையான நடிகர்களும், பி.சி.ஸ்ரீராம், எஸ்.கே.செல்வகுமார், ராஜீவ் மேனன் உள்ளிட்ட திறமையான ஒளிப்பதிவாளர்களும், ஜீ.வி.பிரகாஷ், கோவிந்த் வசந்த் போன்ற இசையமைப்பாளர்களும் பங்களிப்புச் செலுத்தியிருந்த இந்த ஆந்தாலஜி கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. வாழ்க்கைக் குறித்த எந்தப் புரிதலுமின்றி எடுக்கப்பட்ட குறும்படங்கள் என பெரும்பாலான விமர்சனங்கள் இந்த ஆந்தாலஜியை நிராகரித்தன.

Also read... நவம்பர் 19 திரையரங்குகளில் வெளியாகும் சந்தானம் படம்...!

இந்நிலையில், புத்தம் புதுக்காலை இரண்டாம் பாகம் என அடுத்த ஆந்தாலஜியை டிசம்பர் மாதம் அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது. முதல் ஆந்தாலஜியில்  இயக்குனராக பங்களிப்பு செய்த யாரும் இதில் இல்லை. ஹலிதா, பாலாஜி மோகன், மதுமிதா ஆகியோருடன் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் ரிச்சர்ட், புஷ்கர் - காயத்ரியின் உதவி இயக்குனர் சூர்யா ஆகியோரும் தலா ஒரு குறும்படத்தை இயக்குகின்றனர். அர்ஜுன் தாஸ், லிஜோ மோள் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்

கொரோனா பேரிடர் பின்புலம் மட்டுமே இந்த இரண்டாம் பாகத்துக்கும், முதல் பாகத்துக்குமான ஒற்றுமையாக இருக்கும் என கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: