முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Pushpa vs Valimai: இந்தியில் புஷ்பா வசூலை வலிமை முறியடிக்குமா?

Pushpa vs Valimai: இந்தியில் புஷ்பா வசூலை வலிமை முறியடிக்குமா?

வலிமை

வலிமை

புஷ்பா திரைப்படம் தமிழகம், கேரளாவில் நல்ல வசூலை பெற்றது. முக்கியமாக அதன் இந்திப் பதிப்பு நேற்றுவரை 40 கோடிகளை வசூலித்துள்ளது.

  • Last Updated :

வர்த்தகத்தில் இந்திக்கு அடுத்த இடத்தை தெலுங்கு சினிமா  பிடித்துள்ளது. அத்துடன் பான் - இந்தியா வெளியீடு என்ற பெயரில் தனது வர்த்தக ஏரியாவையும் விஸ்தரித்துள்ளது. தமிழ் சினிமா அதனுடன் போட்டிப் போட முடியுமா?

தமிழ் சினிமாவுக்கு இந்தியாவில் தமிழகம் தவிர்த்து கேரளாவும், தெலுங்கு மாநிலங்களும் வசூலுக்கான ஏரியாவாக இருந்தன. ஆனால், தெலுங்குப் படங்களுக்கு ஆந்திராவும், தெலுங்கானாவும் மட்டுமே இருந்தன. பாகுபலி அதனை உடைத்தது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி எல்லா மொழிகளிலும் வசூல் சாதனைப் படைத்தது. அதனை பிற தெலுங்குப் படங்கள் பாலோ செய்ய ஆரம்பித்துள்ளன.

இதையும் படிங்க.. ஆல்யா மானசாவா? ஷபானாவா? அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகள் யார்?

குறிப்பாக டிசம்பர் 17 வெளியான புஷ்பா திரைப்படம் தமிழகம், கேரளாவில் நல்ல வசூலை பெற்றது. முக்கியமாக அதன் இந்திப் பதிப்பு நேற்றுவரை 40 கோடிகளை வசூலித்துள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் வசூல். தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை கபாலி, காலா, எந்திரன் (ரோபோ), 2.0 என சில படங்களின் இந்தி பதிப்பு மட்டுமே வசூலித்திருக்கின்றன. மாஸ்டர் திரைப்படம் இரண்டு கோடிகளைக்கூட வசூலிக்கவில்லை.

இதையும் படிங்க.. கோவா சென்ற சமந்தா- வைரலாகும் பிகினி படங்கள்

இந்நிலையில் புஷ்பா படத்தின் 40 கோடி வசூல் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. படம் 50 கோடி வசூலை எட்டும் என்பது நம்பிக்கை. ஜனவரி 13 வெளியாகும் அஜித்தின் வலிமை படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடுகின்றனர். இந்திப் பதிப்பு புஷ்பா அளவுக்கு வசூலை பெறுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. வலிமையில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. புஷ்பா அளவுக்கு வட மாநிலங்களில் வலிமை பிரபலமாகவில்லை. படம் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றால் மட்டுமே வலிமையின் இந்திப் பதிப்பு கௌரவமான வசூலை பெறும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Kollywood, Tamil Cinema, Valimai