முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதல்நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தி 'புஷ்பா' சாதனை

முதல்நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தி 'புஷ்பா' சாதனை

புஷ்பா

புஷ்பா

இந்திய அளவில் அனைத்து மொழிகளும் சேர்த்து புஷ்பா சுமார் 47 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையையும் புஷ்பா பெற்றுள்ளது.

  • Last Updated :

புஷ்பா படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் நேற்று வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. எனினும் முதல்நாள் வசூலைப் பொறுத்தவரை ஒரேயொரு பதில்தான். 'பிளாக் பஸ்டர்'.

வட இந்தியாவில் சின்னச் சின்ன நகரங்களிலும் புஷ்பா திரைப்படம் நேற்று ஹவுஸ்ஃபுல்லானதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல் கேரளா, தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை படம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 4 முதல் 6 கோடிகள்வரை முதல் நாளில் வசூலித்திருப்பதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறுகின்றனர். உறுதியான வசூல் இன்னும் வெளியாகவில்லை.

தெலுங்கு மாநிலங்களைப் பொறுத்தவரை ஹைதராபாத்தையும், செகந்திராபாத்தையும் உள்ளடக்கிய நிசாம் ஏரியா முக்கியமானது. இதுவே அங்குள்ளதில் அதிக வசூல் தரும் ஏரியா. நிசாம் பகுதியில் ஒரு படத்தின் வசூலை வைத்தே அதன் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். இங்கு பாகுபலி 2 படம்தான் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருந்தது. பிரபாஸின் சாஹோ அதனை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. நிசாம் பகுதியில் சாஹோ படத்தின் முதல்நாள் ஷேர் மட்டும் 9.41 கோடிகள்.

நேற்று வெளியான புஷ்பா நிசாம் பகுதியில் நேற்று ஒருநாளில் 16.50 கோடிகளை வசூலித்துள்ளது. இதில் ஷேர் மட்டும் 11.45 கோடிகள். பாகுபலி 2, சாஹோ படங்களைவிட இது அதிகம். இந்த ஏரியாவில் இரண்டு இலக்க ஷேரை பெற்ற முதல் படமும் இதுவே.

Also read... நயன்தாரா, சமந்தா படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

இந்திய அளவில் அனைத்து மொழிகளும் சேர்த்து புஷ்பா சுமார் 47 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையையும் புஷ்பா பெற்றுள்ளது. துல்லியமான வசூல் தயாரிப்பு நிறுவனத்தால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Allu arjun