Home /News /entertainment /

'மாஸ்' படம்னா இப்படித்தான் இருக்கணும்... புஷ்பாவை பாராட்டிய சிபிராஜ்

'மாஸ்' படம்னா இப்படித்தான் இருக்கணும்... புஷ்பாவை பாராட்டிய சிபிராஜ்

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

செஞ்சந்தனம் என்ற விலை மதிப்பு மிக்க மரக்கட்டைகளை வெட்டும் நபராக, அல்லு அர்ஜுன் படத்தில் நடித்துள்ளார். அதிலிருந்து, டிரைவராக, பின்னர் கடத்தல்காரராக, பின்னர் ஒட்டுமொத்த செஞ்சந்தன கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவராக அல்லு அர்ஜுன் எப்படி உயர்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
மாஸ் படம் என்றால், அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறி, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்திருக்கும் புஷ்பா படத்தை சிபிராஜ் பாராட்டியுள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் கடந்த டிசம்பரில் வெளியான புஷ்பா, இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. வெளிநாடுகளிலும் இந்தப் படம் வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் புஷ்பா வெளியிடப்பட்டது. ஒரிஜினல் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், டப்பிங்கில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு, டப்பிங் குழுவினர் சிறப்பாக பணியை செய்திருந்தனர். குறிப்பாக, படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து மாஸ்ஸான காட்சிகளும், சரியான முறையில் மற்ற மொழி பேசும் ரசிகர்களை சென்றடைந்தன.

செஞ்சந்தனம் என்ற விலை மதிப்பு மிக்க மரக்கட்டைகளை வெட்டும் நபராக, அல்லு அர்ஜுன் படத்தில் நடித்துள்ளார். அதிலிருந்து, டிரைவராக, பின்னர் கடத்தல்காரராக, பின்னர் ஒட்டுமொத்த செஞ்சந்தன கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவராக அல்லு அர்ஜுன் எப்படி உயர்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கேரக்டரில் நடிப்பை கண்டுபிடிக்காத வகையில் வாழ்ந்துள்ளார். படத்தின் மற்ற நடிகர்களும், பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி சில காட்சிகளில் வந்தாலும் பகத் பாசில் வில்லத்தனத்தில் மிரட்டி அடுத்த பாகத்தில் என்ன செய்வாரோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.



இந்நிலையில் புஷ்பா திரைப்படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி அதிக பார்வைகளை குவித்து வருகிறது. இந்தப் படம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கார்த்தி, 'ரசிகர்களை கட்டுப்போடும் வகையில் புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் நடிப்பு இருந்தது. இயக்குனர் சுகுமார் படத்தின் கேரக்டர்களையும், காட்சிகளையும் அமைத்த விதம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். படத்தில் இடம்பெற்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்' என்று கூறியிருந்தார்.



நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில், 'எந்த சிரமமும் இல்லாமல் இவ்வளவு பெரிய கேரக்டரி அல்லு அர்ஜுன் மிக சிறப்பாக நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உலகை ரசிகர்களுக்கு அனாயசமாக அறிமுகம் செய்கிறார்.' என்று பாராட்டியுள்ளார்.



இந்நிலையில் நடிகரும், நடிகர் சத்யராஜின் மகனுமான சிபி தனது ட்விட்டர் பதிவில், 'ஒரு மாஸ் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் உள்ளது. அற்புதமான நடிப்பை அல்லு அர்ஜுன் வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் சுகுமாறுக்கு பாராட்டுக்கள்' என்று கூறிள்ளார்.



சிபிராஜின் ட்வீட்டிக்கு பதில் அளித்துள்ள புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன், 'அன்பு சகோதரருக்கு நன்றி. எனது நடிப்பை உங்களை கவர்ந்ததை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். புஷ்பா படம் உங்களுக்கு நன்றாக பிடித்துப் போனது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Cinema

அடுத்த செய்தி