• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புஷ்பா படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய லைகா நிறுவனம்...!

புஷ்பா படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய லைகா நிறுவனம்...!

புஷ்பா

புஷ்பா

தமிழில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், வடிவேலின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், த்ரிஷாவின் ராங்கி, யோகி பாபுவின் பன்னிக்குட்டி, ஷங்கரின் இந்தியன் 2 என பல படங்கள் லைகா தயாரிப்பில் வெளிவர உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிவரும் படம் புஷ்பா. இதன் தமிழக திரையரங்கு உரிமையை ரஜினியின் 2.0 படத்தை தயாரித்த லைகா வாங்கியுள்ளது.

செம்மரக்கடத்தல் பின்னணியில் புஷ்பா படத்தை சுகுமார் எடுத்து வருகிறார். அல்லு அர்ஜுன் நாயகன். பகத் பாசில் வில்லன். அவர் தெலுங்கில் அறிமுகமாகும் படம் இது. புஷ்பா படத்தின் கதை பெரியது என்பதால் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம், புஷ்பா - தி ரைஸ் டிசம்பர் 17 திரைக்கு வருகிறது.

புஷ்பா முதல் பாகத்தை தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். பகத் பாசில் உள்பட படத்தில் நடிக்கும் பலரும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள். செம்மரக்கடத்தல் என்ற பிரச்சனையும் தமிழர்களுக்குப் புதிதல்ல. அதனால், படம் தமிழகத்தில் பலத்த வரவேற்பை பெறும் என்பது கணிப்பு.

புஷ்பாவின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ரஜினியின் 2.0 உள்பட பல முக்கிய படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. 2022 ஜனவரி 7 வெளியாகும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையையும் லைகாதான் வாங்கியுள்ளது.

Also read... CONNECT - நயன்தாரா, சத்யராஜ் நடிக்கும் புதிய ஹாரர் படம்!

தமிழில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், வடிவேலின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், த்ரிஷாவின் ராங்கி, யோகி பாபுவின் பன்னிக்குட்டி, ஷங்கரின் இந்தியன் 2 என பல படங்கள் லைகா தயாரிப்பில் வெளிவர உள்ளன.

இவை தவிர இரு இந்திப் படங்களையும் லைகா தயாரிக்கிறது. அத்துடன் படவிநியோகமும் செய்து வருகிறது. நானும் ரவுடிதான், விசாரணை, காலா, ஸ்பைடர், இரும்புத்திரை, சண்டக்கோழி 2 போன்ற தமிழ்ப் படங்களை வாங்கி விநியோகித்தவர்கள் இப்போது ஆர்ஆர்ஆர், புஷ்பா என தெலுங்குப் படங்களின் தமிழ் பதிப்பையும் விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: