Home /News /entertainment /

100 கோடிகள் வசூலுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தப் புஷ்பா இந்திப்பதிப்பு!

100 கோடிகள் வசூலுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தப் புஷ்பா இந்திப்பதிப்பு!

புஷ்பா

புஷ்பா

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றால் இரண்டாம் பாகம் அதைவிட மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதே இதுவரையான நடைமுறை.

  • News18
  • Last Updated :
புஷ்பா படத்தின் இந்திப் பதிப்பு 100 கோடிகள் வசூலுடன் அதிகம் வசூல் செய்த இந்தி டப்பிங் திரைப்படங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சென்ற வருடம் வெளியான திரைப்படங்களில் சர்ப்ரைஸ் ஹிட் என்றால் அது அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம்தான். இதன் வெற்றி அனைவரும் எதிர்பார்த்தது என்றாலும் இதன் இந்தி டப்பிங் 100 கோடிகள் வசூலிக்கும் என யாரும் கணித்திருக்கவில்லை. இதன் மூலம் இந்தி டப்பிங் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த ஐந்தாவது திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா படைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்க்ளுஷன் திரைப்படம் 510.99 கோடிகள் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் 189. 55 கோடிகள் வசூலுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் 142.95 கோடிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகுபலி முதல் பாகம் பாகுபலி பிகினிங் 118.3 கோடிகள் வசூலுடன் நான்காவது இடத்தில் உள்ளது. புஷ்பா திரைப்படம் 101.8 கோடிகள் வசூலுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் 44 கோடிகளுடன் ஆறாவது இடத்திலும், காலா திரைப்படம் 10.38 கோடிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன.



Also read... புதுச்சேரி முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு...!
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றால் இரண்டாம் பாகம் அதைவிட மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதே இதுவரையான நடைமுறை. அப்படித்தான் பாகுபலி, காஞ்சனா திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் வசூலில் சாதனை படைத்தன. புஷ்பா இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Allu arjun

அடுத்த செய்தி