Home /News /entertainment /

புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம்..

புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம்..

புஷ்பா - ஆர்ஆர்ஆர்

புஷ்பா - ஆர்ஆர்ஆர்

Pushpa, RRR Movie : புஷ்பா, ஆர்ஆர்ஆர் இரண்டு படங்களையும் தமிழகத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களை தெலுங்குப் படம் என்று ஒதுக்கிவிட முடியாது. அவை தெலுங்கில் வெளியாகும் அதேநாள் தமிழிலும் வெளியாகின்றன. தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக விளம்பரங்கள் செய்யப்படுகிறது. திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.

புஷ்பா திரைப்படம் டிசம்பர் 17 தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு மாநிலங்கள் தவிர்த்து கேரளாவில் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அதிகமுண்டு. அவரது அனைத்துப் படங்களும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டுள்ளன.

பகத் பாசில் புஷ்பாவில் நடித்திருப்பதால் கேரளாவில் நேரடி மலையாளப் படம் போலவே ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகிறது. தமிழ்நாட்டிலும் அல்லு அர்ஜுனுக்கு கணிசமான எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லை என்பதால் இங்கும் நல்ல வசூலை பெற வாய்ப்புள்ளது.

அல்லு அர்ஜுனின் சரைனைடு படத்தின் இந்திப் பதிப்பு யூடியூபில் 63 கோடிகளுக்கு மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது. டப்பிங் படங்கள் மூலம் இந்தியிலும் அவர் பிரபலம். தமிழ்ப் படங்கள் குறித்து எழுதாத இந்தி, ஆங்கில ஊடகங்கள் புஷ்பா குறித்து தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடுகின்றன. இந்தப் படம் அல்லு அர்ஜுனை அடுத்தத் தளத்துக்கு கொண்டு செல்லும். படத்தைப் பார்த்த சென்சார் இதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 27 நிமிடங்கள் 16 வினாடிகள்.

புஷ்பாவைத் தொடர்ந்து 2022 ஜனவரி 7 ல் ஆர்ஆர்ஆர் வெளியாகிறது. பாகுபலி படங்கள் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் அனைவரும் அறிந்தது. தமிழ்நாட்டில் பாகுபலி பல வசூல் சாதனைகளையும் படைத்தது.

ஆர்ஆர்ஆர் அதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவும் புஷ்பா போன்று ஐந்து மொழிகளில் வெளியாகிறது. பாகுபலியின் வசூலை இது முறியடிக்குமா என்பதே கேள்வி. இதன் ட்ரெய்லர் இன்று காலை 10 மணி முதல் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மாலை 4 மணிக்கு யூடியூபில் வெளியிடுகின்றனர்.

also read : விரைவில் ராம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?

படத்தைப் பார்த்த சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் ரன்னிங் டைம் 3 மணி 6 நிமிடங்கள் 54 வினாடிகள். ராஜமௌலி இயக்கிய படங்களில் இதுவே அதிக நீளம் கொண்ட திரைப்படம்.
புஷ்பா, ஆர்ஆர்ஆர் இரண்டு படங்களையும் தமிழகத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Allu arjun, Ram Charan

அடுத்த செய்தி