புஷ்பா படத்தின் ‘ஏ சாமி’ பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில் பரிதாபமாக இறந்துக் கிடந்துள்ளார். அவரது மரணத்திற்கு யாராவது காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோதியின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாலை 5.30 மணியளவில் ஷாத்நகரில் ரயில் நின்றதாகவும், ஆனால் பாதி தூக்கத்தில் இருந்த ஜோதி காச்சிகுடா ஸ்டேஷன் வந்துவிட்டதாக நினைத்து இறங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தான் தவறான ஸ்டேஷனில் இறங்கியதை உணர்ந்து, நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்ததால் தலை, இடுப்பு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு நடிகை ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக, நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
நீங்க ஏன் குறுக்கா மறுக்கா ஓடுறீங்க? தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து ஷகீலா
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் நடனமாடிய ஜோதி ரெட்டியின் மறைவுக்கு தெலுங்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.