Home /News /entertainment /

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சூழல் வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியீடு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சூழல் வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியீடு

சுழல் வெப் சீரிஸ் போஸ்டர்

சுழல் வெப் சீரிஸ் போஸ்டர்

இந்த ட்ரெய்லரில், 'இந்த உலகத்த பத்தி உனக்கு எல்லாம் தெரியும் நெனைச்சேன். இங்க இருக்குற மனுசங்க அவ்ளோ சிம்பிளாவோ, ஈஸியாவோ இல்ல' போன்ற வசனமும், ட்ரெய்லர் முழுக்க பின்னணியில் ஒளிக்கும் வசனமும் கவனம் ஈர்க்கிறது.

  • News18
  • Last Updated :
    கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சூழல் வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கதை உருவாக்கத்தில் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அரவிந்த் இயக்கியுள்ள இணைய தொடருக்கு சூழல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஆர்.பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த தொடருக்கான அறிமுக விழா கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்றது.

    சூழல் என்ற தமிழ் வெப் தொடர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    Also read... மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம்!

    ட்ரெய்லரை பொறுத்தவரை, இந்த வெப் தொடர் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. காணாமல் போன தனது தங்கையை தேடி அலைந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைத் தேடும் காவல்துறை அதிகாரியாக கதிர் நடித்திருக்கிறார்.



    இந்த ட்ரெய்லரில், 'இந்த உலகத்த பத்தி உனக்கு எல்லாம் தெரியும் நெனைச்சேன். இங்க இருக்குற மனுசங்க அவ்ளோ சிம்பிளாவோ, ஈஸியாவோ இல்ல' போன்ற வசனமும், ட்ரெய்லர் முழுக்க பின்னணியில் ஒளிக்கும் வசனமும் கவனம் ஈர்க்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Parthiban, Actress Aishwarya Rajesh, Entertainment

    அடுத்த செய்தி