முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெள்ளத்தில் அடித்துச் சென்ற பிரபல பாடகர் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் அடித்துச் சென்ற பிரபல பாடகர் சடலமாக மீட்பு

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

அப்போது கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரேரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

  • Last Updated :

ஆற்றில் தவறி விழுந்த பாடகர் மன்மீத் சிங் உயிரிழந்துள்ளார்.

பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங். இவர் சுபி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். சுபி பாடல்களால் பிரபலமான செய்ன் பிரதர் இசைக்குழுவிலும் இடம்பெற்று இருந்தார் மன்மீத் சிங். இவர் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்றார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு கரேரி ஆற்றுப் பகுதிக்கு சென்றார்.

அப்போது கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரேரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மன்மீத் சிங் நண்பர்களுடன் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். அப்போது மழைநீரில் வழுக்கி திடீரென்று ஆற்றுக்குள் விழுந்தார்.

Punjabi Singer Manmeet Singh, manmeet singh found dead in river after flash flood, Manmeet Singh dead, Manmeet Singh death, Manmeet Singh dead body, Manmeet Singh songs, singer Manmeet Singh, punjabi singer Manmeet Singh death, Manmeet Singh wife, Manmeet Singh singer, பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங், மன்மீத் சிங் பாடகர், மன்மீத் சிங் பாடல்கள், மன்மீத் சிங் இறப்பு, மன்மீத் சிங் மரணம், ஆற்றில் மூழ்கி பாடகர் மன்மீத் சிங் மரணம்
மன்மீத் சிங்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைப் பார்த்த அவரது நண்பர்கள் அலறினர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு, கங்க்ரா மாவட்டத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் அவரது உடல் ஒதுங்கியிருந்தது. பாடகர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விஷயம் பஞ்சாப்பில் கலத்தை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Punjab