ஆற்றில் தவறி விழுந்த பிரபல பாடகரின் உடல் சடலமாக மீட்பு

மன்மீத் சிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அவரது உடல் கரேரி ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் தவறி விழுந்த விபத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  பிரபல பஞ்சாபி படகரான மன்மீத் சிங் சமீபத்தில் நண்பர்களுடன் தர்மசாலவுக்கு சென்றுள்ளார். திங்கட்கிழமை அன்று தர்மசாலாவில் இருந்து கரேரி பகுதிக்கு சென்றுள்ளார். கரேரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது.

  கனமழையின் காரணமாக மன்மீத் சிங் கால் வழுக்கி கரேரி ஆற்றில் விழுந்துள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மன்மீத் சிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அவரது உடல் கரேரி ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  இமச்சால பிரேதசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ள நிலையில் 8 பேர் மாயமாகி உள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் இமாச்சல பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர்.

  வெள்ளத்தில் சிக்கி உள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளப் பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்து கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: