• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Puneeth Rajkumar: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது!

Puneeth Rajkumar: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது!

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டவர்கள் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

  • Share this:
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவித்து சிறப்பித்துள்ளது அம்மாநில அரசு.

    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த மாதம் 29-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக திகழ்ந்த புனித் ராஜ்குமார், ஏழை எளியோர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். அவர் மறைவுக்கு பிறகு புனித்தின் இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து குறுகிய காலத்தில் கர்நாடகாவில் 6000-க்கும் மேற்பட்டவர்கள் கண் தானம் செய்துள்ளனர்.

    புனித் ராஜ்குமாரின் நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 16 நாட்களாக ரசிகர்கள் அஞ்சலி செலுத்து வருகிறார்கள். அதோடு விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டவர்கள் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புனித்துக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

    அந்த நிகழ்வில் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: