ஷங்கர் இந்தியன் 2 படத்தை இப்போதைக்கு தொடங்குவார் என தெரியவில்லை. திட்டமிட்டபடி ராம் சரண் படத்தை முடிப்பதிலேயே அவரது முழுக்கவனமும் உள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்துக்காக புனேயில் பிரமாண்ட அரங்கு தயாராகி வருகிறது.
இந்தியன் 2 தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அப்படத்தை பாதியில்விட்டு தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமானார் ஷங்கர். தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்க, தமன் இசையமைக்கிறார். நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இதன் பூஜையும், தொடக்கவிழாவும் ஹைதராபாத்தில் நடந்தது. சிரஞ்சீவி, ராஜமௌலி, ரன்வீர் சிங் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்காக புனேயில் பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதலில் ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷங்கர் எடுக்கிறார் பிறகு ராம் சரண், கியாரா அத்வானி காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சுமார் 10 கோடி பட்ஜெட்டில் ரயில் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனர் அட்லியும்
ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தை புனேயில்தான் தொடங்கினார். இப்போது
குருவும் புனேயை தேர்வு செய்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ராம் சரணின் 15 வது படம் என்பதால் ஆர்சி 15 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.